தொடர்ந்து ஏறுமுகமாகும் தங்கம் விலை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
2 February 2024, 11:32 am

தொடர்ந்து ஏறுமுகமாகும் தங்கம் விலை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் தங்கம் விலைநேற்று உயர்ந்த நிலையில் இன்று கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,800க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,825-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.78-க்கும் ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!