அட இதுதான் தீபாவளி ஆஃபரா…? அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
6 November 2023, 10:34 am

அட இதுதான் தீபாவளி ஆஃபரா…? அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று (நவ.06) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.5700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.78,200-க்கு விற்பனையாகிறது.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?