இதுதான் உண்மையாலுமே தீபாவளி பரிசு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…!!

Author: Babu Lakshmanan
11 November 2023, 11:27 am

இதுதான் உண்மையாலுமே தீபாவளி பரிசு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

தங்கம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,800-ஆகவும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,600ஆகவும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,070ஆகவும், சவரன் ரூ. 48,560ஆகவும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.76.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?