வார இறுதியில் ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சற்று குறைவு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
15 March 2024, 10:46 am

வார இறுதியில் ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சற்று குறைவு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

மார்ச் மாத தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ரூ.200 உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று கொஞ்சம் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 49 ஆயிரத்துக்கும், கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 125க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.80க்கும், பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?