நிலம் பறிபோனால் வாழ்வதாரம் பறிபோகும்…. அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள் : டன்லப் டயர் தொழிற்சாலை தொழிலாளர்கள் கதறல்!!
Author: Babu Lakshmanan4 October 2021, 12:50 pm
சென்னை : டன்லப் டயர் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் அரசியல் பிரமுகர்களின் செயலை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரில் இயங்கி வந்த டன்லப் தொழிற்சாலையானது சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு இயங்கி வந்தது. இந்த நிலையில் பொருளாதார சிக்கல் மற்றும் உற்பத்தி தேக்கம், நிதி சுமை காரணமாக கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டு கிடந்தது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தொழிற்சாலையானது குறைந்த அளவு தொழிலாளர்களை கொண்டு மீண்டும் இயக்கப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி மற்றும் வங்கி கடன் காரணமாக மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் வாடி கொண்டிருந்தனர். இதனையடுத்து தொழிலாளர்கள் அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்தை மதிப்பில் இன்றைய விலை சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்த இடத்தினை அந்த பகுதியினை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிக்க தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விற்க முயற்ச்சி செய்து வருவதாகவும், இதற்காக போலி பத்திரங்களை தயார் செய்து அதனை பதிவு செய்யும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தமிழக அரசு இந்த நில விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு, இந்த நிலத்தினை சம்மந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்டு தர வேண்டும் என்றும், இந்த நிலம் பறிபோனால் என்னற்ற தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி வாழ்வதாரம் பறிபோகும் சூழல் உருவாகும் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு இந்த நி லவிவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அந்த நிலத்தினை மீட்டு தந்து தொழிலாளர்களின் வாழ்வதாரத்தை காத்திட வேண்டும் என டன்லப் தொழிலாளர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
0
0