ஸ்கூட்டரில் வாக்கு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்ட விவகாரம் : தேர்தல் ஆணையம் விளக்கம்…!!!

7 April 2021, 3:48 pm
Velacherry vote - updatenews360
Quick Share

சென்னை : சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனிடையே, நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் வைத்து இரு தேர்தல் பணியாளர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது, அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, வேளச்சேரி தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், ஸ்கூட்டரில் வாக்கு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒன்றும் வாகனங்களில் எடுத்துச்செல்லப்படவில்லை. பழுதான 2 விவி பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது, என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 109

0

0