தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…? வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்

18 August 2020, 1:25 pm
weather _UpdateNews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரத்திற்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கி உள்ளது. மேற்கு மலைத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

இந் நிலையில் தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறப்பட்டு உள்ளதாவது:

நீலகிரி, சேலம், கோவை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மேற்கு கடலோரப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளது.

Views: - 0

0

0