சேப்பாக்கம் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு : உதயநிதிக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்

Author: Babu Lakshmanan
17 September 2021, 8:23 pm
Udhayanithi stalin - Updatenews3
Quick Share

சென்னை : சேப்பாக்கம் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். இவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான எம்எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் பதிலளிக்க ஆணையிட்டனர். மேலும், இந்த வழக்கை அக்., 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 143

0

1