என்னக் கொடுமை சார் இது… கறிக்கோழி விலை திடீரென கிடுகிடு உயர்வு… அசைவப் பிரியர்கள் அதிருப்தி!!

7 July 2021, 10:16 am
namakkal chicken - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் கறிக்கோழி விலையேற்றத்தால் அசைவப் பிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இறைச்சி கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கிச்சென்றனர். ஊரடங்கு காலத்தில் கறிக்கோழி கிலோ ஒன்றிற்கு ரூபாய் 110, 120 என இருந்து வந்தது. தற்போது இந்த விலை திடீரென உயர்ந்து, குமரி மாவட்டத்தில் இன்று கறிக்கோழி மொத்த விலை ரூபாய் 120 ஆக இருந்தது. சில்லரை விலை கிலோ 140 ஆக விற்பனை செய்யப்பட்டது.

வரத்துக் குறைவு காரணமாக கோழி இறைச்சி விலையேற்றத்துடன் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கறிக்கோழி விலை ஏற்றம் காரணமாக அசைவப் பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Views: - 274

0

0