உங்களோட செல்பி எடுக்கணும்…சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!!

19 October 2020, 4:17 pm
cm 3 selfie - updatenews360
Quick Share

தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்ட சிறுவனின் ஆசையை உடனடியாக நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார். தாயாருக்கு இறுதி மரியாதை செய்யும் பொருட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையத்திற்கு சென்றார்.

அவரது தாயின் இறுதி சடங்குகள் முடிந்த பின்னர், துக்க இல்லத்திற்கான காரியங்கள் நடைபெற்றன. முதலமைச்சரின் வருகையை அறிந்து ஏராளமான கட்சி தொண்டர்கள், உள்ளூர் மக்கள் முதலமைச்சரின் இல்லத்திற்கு வந்தனர்.

அப்போது முதலமைச்சரை கண்ட சிறுவன் ஒருவன் விரைந்து வந்து, நான் உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கலாமா என கேட்டுள்ளான். சற்று அடக்கத்துடன் மழலைக் குரலில் முதலமைச்சர் பழனிசாமியிடம் சிறுவன் கேட்கவே, அந்த சிறுவனின் குழந்தை மனதை புரிந்து கொண்டுள்ளார். பின்னர், அந்த சிறுவனுடன் செல்பி எடுக்க சம்மதிக்கவே புன்னகையுடன் செல்பி எடுத்துக்கொண்டான் அந்த சிறுவன். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 21

0

0