மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2025, 4:29 pm
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் ரவி, ஜெகன், நல்லூர் சண்முகம், மாநில பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் பொருளாளர் திலகபாமா,மாநில துணை தலைவர்கள் என்.டி.சண்முகம்,இளவழகன் உள்ளிட்ட திரளானோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் முதல்வராக உள்ளவருக்கு எதுவும் தெரியவில்லை.
இதையும் படியுங்க: கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!
மக்களை ஏமாற்ற ரோட் ஷோ நடத்துகிறார்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் தேவையற்ற வினாக்களை கேட்டிருந்தனர்.
இதில் தமிழ்நாட்டின் முதலீடு வளர்ச்சி குறித்தும் அண்ணாதுரை எதற்காக திகவில் சேர்ந்தார் என பல கேள்விகளை கேட்டுள்ளனர். இது வினாக்களா? இப்படி கேட்பதா நியாயம்?

தற்போது இம்மாவட்டத்தில் மா விளைச்சல் அதிகம் இருந்தும் டன் ரூ,.3 ஆயிரம் தான் விலை போகிறது. இதனை அரசு போக்க வேண்டும் பாலாற்றில் 3 தடுப்பணைகளை தான் கட்டி உள்ளனர். மேலும் தடுப்பணைகளை கட்ட வேண்டும் முதல்வர் மக்கள் பிரச்சணைகளில் கவணம் செலுத்த வேண்டுமென பேசினார்.
இம்மாவட்ட பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வேலூர் மாநகரில் சாலைகளை செப்பனிட்டு போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்ஒடுக்கததூரைபுதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்பள்ளிகொண்டா பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் அரசம்பட்டு அணைக்கட்டும் பணியினை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
பத்தலபள்ளி அணைக்கட்டு பணியினை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கேவி குப்பத்தில் ஒகேனக்கல் கூட்டு கூட்டு நீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் குடியாத்தத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.