நானும் நடிகன் தான் : சிஐஐ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

Author: Rajesh
9 April 2022, 11:37 am
Quick Share

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின், மிகப்பெரும் கருத்தரங்கு நந்தம்பாக்கத்தில் ஏப்ரல் 9 மற்றும் 10ம் ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் இயக்குநர் ராஜமெளலி, மணிரத்னம், ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

மாநாட்டை துவங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘நானும் திரைப்படத்தில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன் என தெரிவித்தார்.

திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என்றார். 2 ஆண்டுகாலம் கொரோனாவால் பல்வேறு துறையினர் பாதிப்படைந்தனர். அதில் திரையுலகம் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது. லட்சக்கணக்கான மக்கள் திரைத்துறையை நம்பி உள்ளனர். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகும். திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு என பேசினார்.

திரைத்துறையாக இருந்தாலும் செய்தித்துறையாக இருந்தாலும் தமிழ்நாடு மிக நீண்ட வரலாறு கொண்டதாகும். திரைப்படம் தொடங்கும் முன்பு கஞ்சா, குட்கா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது என்பது போல கஞ்சா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Views: - 802

0

0