“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க“ : சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் பழனிசாமி! (வீடியோ)

27 November 2020, 7:15 pm
CM Wish Marriage - Updatenews360
Quick Share

கடலூர் : நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு சென்ற போது வழியில் திருமணம செய்து கொண்டு வந்த மக்களை காரில் இருந்து இறங்கி செருப்பை கழட்டி வைத்து முதலமைச்சர் ஆசிர்வாதம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சேரி அருகே மரக்காண்ம் அருகே கரையை கடந்தது.

புதுச்சேரிக்கு மிக அருகில் உள்ள கடலூர் மாவட்டம் அதிகளவு பாதிப்புக்கு ஆளாகியது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட நேற்று காரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார்,.

அப்போது திடீரென காரை நிறுத்த சொன்ன முதலமைச்சர், கீழே இறங்கி வழியில் சென்ற மணமக்களை வாழ்த்தினார். மேலும் தனது காலில் இருந்த செருப்புகளை கழட்டி வைத்து, மணமக்களுக்கு ஆசிர் வாதம் செய்தார்.

இது குறித்து அதிமுகவினர் டிவிட்டரில் பகிர்ந்து முதலமைச்சர் எடப்பாடியார் செயலை பாராட்டியுள்ளனர். குறிப்பிட்ட அந்த வீடியோவில் சாலையில் காரில் சென்ற முதலமைச்சரிடம், மணமக்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க என கேட்டுள்ளனர். இதையடுத்து ஆசிர்வாதம் செய்த முதலமைச்சர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0