கொடுத்த வாக்கை காப்பாற்றதவர் முதலமைச்சர் ஸ்டாலின் : வால்பாறை மக்கள் புலம்பல்!!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2021, 1:35 pm
கோவை : உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் ஸ்டாலின் அளித்த வாக்குறுதி 100 நாளாகியும் நிறைவேற்றப்படவில்லை என்று வால்பாறை பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வால்பாறையை அடுத்த காளியப்பன் கவுண்டன் புதூர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சாந்தி கூறுகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் தொகுதிக்கு வந்தார். அப்பொழுது எங்கள் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டி நான் கோரிக்கை வைத்தேன். அதற்கு திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களுக்குள் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ஆனால் திமுக ஆட்சி அமைந்து 100 நாட்களை கடந்தும் அவர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கான அரசாணை வெளியிட்டும் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.
எங்கள் பகுதியில் என ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். எந்த விழா என்றாலும் தெருக்களில் அமர்ந்து விழா நடத்துவது வெட்கக்கேடாக உள்ளது. உடனடியாக அரசு அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு கூறினர்.
0
0