“கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம்“ : திமுகவில் இணைந்த மநீம மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவலை!!

8 July 2021, 7:48 pm
Mnm In DMK- Updatenews360
Quick Share

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை கடந்தது. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் கமல்ஹாசன் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவினார்.

இதையடுத்து மநீம தோல்வியின் எதிரொலியால் அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர். கமல்ஹாசனின் கொள்கையில் மாற்றம் இல்லாததுதான் விலகியதற்கு காரணம் என மநீம மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தற்போது தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்தார்.

மேலும், 11,000 நிர்வாகிகள் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.

அண்ணா அறிவலாயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகேந்திரன் முன்பே வாந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும். தேர்தலை அறிவித்தபோதே மகேந்திரனை எதிர்ப்பார்த்தேன். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் கிடைத்திருக்கின்றனர் என்றார்.

Views: - 120

0

0