விரைவில் மதுரைக்கு வருகை தரும் முதலமைச்சர் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல்…

6 November 2020, 11:18 am
Edapp - Updatenews360
Quick Share

மதுரை : சாலைகளில் வீணாக செல்லும் மழை நீரை நீர் நிலைகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடுதலாக 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் கட்டடத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் த.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “மதுரையில் 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் கட்டடத்தை விரைவில் திறப்பு, முதல்வர் நேரில் வந்து திறந்து வைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் எந்தவொரு பொருட்கள் மற்றும் உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை, நவம்பர் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயமுத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகமும் மழையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு பாதிப்பை சரி செய்ய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மதுரை மாநகரில் உள்ள 33 ஊரணிகளில் மழை நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது, சாலைகளில் தேங்கும் தண்ணீரை நீர் நிலைகளில் சேகரிக்க நடவடிக்கை, சாலைகளில் தேங்கும் மழை நீர் 30 நிமிடங்களில் வடிந்து விடுகிறது, மதுரையில் சாலைகளில் மழை நீர் தேங்கும் இடங்களாக 280 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என கூறினார்.

Views: - 37

0

0