முதலமைச்சர் நாளை தருமபுரி வருகை : அமைச்சர் அன்பழகன் ஆய்வு!!

19 August 2020, 5:39 pm
Minnister Inspection - Updatenews360
Quick Share

தருமபுரி : தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளதால் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வுக்கூட்டம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இதன்தொடர்ச்சியாக நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

நாளை மாலை தருமபுரி மாவட்டத்திற்க்கு வரும் தமிழக முதல்வர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

இதைதொடர்ந்து மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதற்கான மாவட்ட நிர்வாகம் செய்துவரும் முன்னேற்பாடுகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் ஆய்வு மேற்கண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Views: - 32

0

0