ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை : துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2021, 3:59 pm
உதகை : குன்னுாரில் ஆற்றோரம் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை ஆற்றில் தவறி விழந்து அடித்து செல்லப்பட்ட குழந்தையை தீயணைப்புத் துறை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
குன்னுார் அருகே உள்ள MGR நகர் சுறா குப்பத்தில் வசிக்கும் மணிமேகலை மாதேஸ்வரன் தம்பதிக்கு ஒன்றரை வயதில் செல்வி என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை ஆற்றோரம் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி ஆற்றில் விழந்துள்ளது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட அருகே இருந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அக்குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
0
0