வயிற்று வலிக்காக ‘அட்மிட்’ செய்யப்பட்ட சிறுமிக்கு பிரசவம்..! போலீசார் விசாரணை!!

19 July 2021, 3:42 pm
Baby Born For Child - Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் பத்தாவது படிக்கும் 15 வயது சிறுமி மற்றும் அவரது தாய் ஆகியோர் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் சிறுமியின் தாய், சிறுமியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அப்போது மருத்துவர்கள் வயிற்று வலியில் துடித்த சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த போது சிறுமிக்கு திடீரென ஆண் குழந்தை பிறந்துள்ளது. வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாற்றுத்திறனாளி ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை வன்புணர்வு செய்த குருசாமியை பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 149

0

0