குழந்தைகள் தினம் : வருங்கால தூண்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!!

14 November 2020, 3:39 pm
CM Wish- Updatenews360
Quick Share

நவம்பர் 14ம் தேதியான இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பிரமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். அனைத்து குழந்தை செல்வங்களுக்கும், அவர்களை நாட்டின் வருங்கால தூண்களாக செம்மைப்படுத்தும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சிய அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

Views: - 23

0

0