தனுஷ் விவகாரத்தில் புதிய திருப்பம்: மதுரை தம்பதியினர் பரபரப்பு விளக்கம்.!

Author: Rajesh
26 May 2022, 12:40 pm

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்று பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

இதனிடையே, தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி, கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் ரூ.10 கோடி கேட்டு தங்களுக்கு அனுப்பிய நோட்டிசை நடிகர் தனுஷ் திரும்ப பெற வேண்டும் என மேலூர் கதிரேசன் தம்பதியரின் வழக்கறிஞர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தனுஷ் எங்கள் மகன் என்ற விவகாரத்தில் நாங்கள் ஒரு போதும் பின்வாங்க போவதில்லை. சட்டபடி சந்திக்க தயார் என மேலூர் கதிரேசன் தம்பதியரின் வழக்கறிஞர் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!