“சினிமா படப்பிடிப்பு தடை பட்டுள்ளதால் ரூ.1000 கோடி இழப்பு” – தமிழக அரசிடம் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..!

29 August 2020, 1:46 pm
Quick Share

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதுபோல் திரைப்பட படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கிற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் மூடப்பட்டன. தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. இதனால், அதை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான ஃபெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திரைப்படத்துறையினர், திரைப்பட வணிகம் சார்ந்த பல்வேறு தரப்பினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மற்றொருபுறத்தில் இந்தத் துறையை நம்பியிருக்கும் ஃபெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனை அடுத்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதுபோல் திரைப்பட படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும், படப்பிடிப்பு தடைபட்டுள்ளதால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 36

0

0