ரவுடிகளாக மாறிய ரயில்வே நிர்வாகிகள்.. மதுரை ரயில்வே அலுவலகத்தில் நிர்வாகிகள் இடையே மோதல் : 4 பேர் சஸ்பெண்ட்…!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 12:37 pm
Madurai Clash - Updatenews360
Quick Share

மதுரை : ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் அலுவலகத்தில் பணியாற்றும் தெற்கு ரயில்வே எம்பிளாயிஸ் சங்கத்தை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிக்கு பணி இடமாற்றம் தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்திக்கும் மற்றொரு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் ரயில்வே ஊழியர்கள் இரு தரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் இருதரப்பு இடையே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தகராறில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 695

0

0