பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் பங்க்கில் போராட்டம்; காங்கிரஸ்- ஊழியர்கள் மோதல்!

7 July 2021, 8:32 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டி உள்ளது. இதனை கண்டித்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்க் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடத்தினர், இதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் தலைமையில் தனியார் பெட்ரோல் பங்க் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அப்போது அந்த பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து வைத்தனர்.

Views: - 370

0

0