காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய தூய்மை பணியாளர்கள் : குவியும் பாராட்டு!!

2 October 2020, 12:58 pm
Gandhi Statue Scavengers 1 - updatenews360
Quick Share

நீலகிரி ; காந்தி ஜெயந்தி விழாவான இன்று உதகையில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசு மற்றும் கட்சியினர் சார்பில் மகாத்மா காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வந்தாலும் இன்று நாடு முழுவதும் தங்களது உடல் நிலை பாராமல் தூய்மைப் பணியை மேற்கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் கொரோனா காலம் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் தங்கள் பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உதகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சேரிங் கிராஸ் பகுதியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இம்மாதம் ஓய்வுபெறும் ஒரு தூய்மை பணியாளரை வைத்து அனைவரும் மாலை அணிவித்தது போற்றக்கூடிய செயல் என சமூக ஆர்வலர்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 111

0

0