தூய்மை பணியாளர்கள் பரபரப்பு புகார்.. அமைச்சர் கேஎன் நேரு மறுப்பு!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2025, 1:06 pm
தமிழகத்தில் ஊனமுற்றோர் மற்றும் வயதானவர்கள் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை இன்று தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு உறையூர் பகுதியில் உள்ள அமுதா கூட்டுறவு சங்கத்தில் நேரடியாக வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வேன்களை கொடியசைத்து இத்திட்டத்தை துவக்கி வைத்து பயனாளிகள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு
ஒரு நேரத்தில் மணிக்கணக்கில் மக்கள் மணி கணக்கில் கடைகளை காத்திருந்தனர். பின்னர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் இதனை சரி செய்யப்பட்டது.
தற்போது வயதானவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் நேரடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக முதல்வர் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் 1128 வண்டிகளில் 88 ஆயிரத்து 310 பயனாளிகளுக்கு இன்றைக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இன்றைக்குள் 80 சதவீத பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுவிடும்.
தூய்மை பணியாளர்கள் முதல்வர் போகவில்லை எனக்கூறி போராட்டம் தொடர்ந்து வருவதாக என்ற கேள்விக்கு? நாங்கள் நான்கு நாட்கள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சுமுகமாக தீர்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து வருகிறோம்.

நிரந்தர பணிக்கெல்லாம் முதலமைச்சர் முடிவு செய்ய வேண்டும். நேற்று அதிமுக அமைச்சர் சொல்லி இருக்கிறார் 17,000 பேரை நாங்கள் நிரந்தர படுத்திருக்கிறோம் என சொல்லி இருக்கிறார். ஆனால், துப்புரப் பணிக்காக போடப்பட்டு ஆனால் அவர்கள் துப்புர பணிக்காக பயன்படுத்துவதில்லை.
நாடு முழுவதும் துப்புற பணியில் பிரச்சனை உள்ளது. அவர்கள் சொல்வது போல் ஒரே நாளில் செய்கிற காரியம் அல்ல. தொடர்ந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், தேவையானதை முதல்வர் செய்ய சொல்லியிருக்கிறார்.
தெரு நாய் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்றுள்ளது என்ற கேள்விக்கு? அருமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. விலங்கிய ஆர்வலர்கள் தலையிட்டால் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர். அதற்கு தடுப்பூசி போட்டு அறுவை சிகிச்சை செய்து பாதுகாக்க வேண்டும், அதற்கான உத்தரவு வந்தவுடன் மாநகராட்சி மதுரை செயல்படுத்தப்படும்.
தேர்தல் வாக்குறுதிகள் நிதி நிலை பொறுத்து ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஒரே நாளில் செயல்படுத்த முடியாது. தலைவர் சொன்னதை விட சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
எதிர்க்கட்சியினர் தேர்தல் வருவதால் குறை சொல்கின்றனர். மக்களுடன் ஸ்டாலின் பெரும் வரவேற்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,
மருத்துவ முகாம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது, தற்போது ரேஷன் பொருட்கள் கொண்டு செல்ல திட்டம் நடைபெற்று வருகிறது.

இன்னும் 8 மாதம் தேர்தலுக்கு இருக்கிறது. ஓரிரு நாட்களில் தூய்மை பணியாளர்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என தெரிவித்தார்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
