வீடுகளை அடித்துச் சென்ற நீர்! உத்தரகாண்டை சூறையாடிய வெள்ளம்! பதைபதைக்கும் வீடியோ…
Author: Prasad5 August 2025, 4:29 pm
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசியின் தரலி என்ற பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்த நிலையில் அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 10 முதல் 12 குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Chilling visuals show destruction after a cloudburst near the Khir Ganga catchment in Tharali, Uttarkashi, Uttarakhand.
— Yash Tiwari (@DrYashTiwari) August 5, 2025
20–25 hotels and homestays damaged.
10–12 workers feared trapped under debris.
Damage reported near the ancient Kalp Kedar temple.
Praying for the safety of… pic.twitter.com/B00UnAy8BU
கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட விடுதிகள் நீரில் அடிச்செல்லப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தை மலை உச்சியில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் பலர் அச்சத்தில் அலறும் சப்தங்கள் அந்த வீடியோவை காண்பவர்களின் மனதில் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழப்புகள் குறித்து தற்போது எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இச்சம்பவம் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
