செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

30 November 2020, 4:06 pm
Cm inspection - updatenews360
Quick Share

சென்னை : செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் ஆகிய சதுப்பு நில பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்த நிவர் புயலினால் ஒரு சில பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு பகுதிகளிலும் அவர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சென்னையில் நீர்நிலை பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் மழைநீர் தேங்குகிறது. 2004ல் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம்நகரில் 60 % வீடுகள் அதிகரித்துள்ளன. 2015ல் மட்டுமல்ல அதற்கு முன்பிருந்தே கனமழையின் போது சென்னையில் தண்ணீர் தேங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிதி ஆதாரம் தேவை. தற்போது, தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிதி ஆதாரம் இல்லை. மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

அரசின் சிறப்பான நடவடிக்கையினால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, எனத் தெரிவித்தார்.

Views: - 29

0

0