காவலர் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும்: முதலமைச்சர் அறிவிப்பு..!!

6 February 2021, 3:46 pm
cm about police hospital - updatenews360
Quick Share

சென்னை: காவலர் மருத்துவமனைகளை முழுநேர காவலர் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் மருத்துவமனைகள் முழுநேர காவல் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். கோவை, மதுரை, திருச்சி, ஆவடியில் உள்ள காவல் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM edappadi palanisamy - updatenews360

மேலும், சென்னை, சேலம், நெல்லையில் உள்ள பகல்நேர காவல் மருத்துவமனை, நவீன உபகரணங்கள், மருத்துவ ஆய்வகங்கள், அறுவை அரங்குகளுடன் இனி 24 மணி நேரமும் செயல்படும். சென்னை புனித தோமையர் மலை, சேலம் மற்றும் நெல்லையில் உள்ள காவல் துறையினருக்கான மருந்தகங்களும் தரம் உயர்த்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 26

0

0