மீண்டும் கர்ஜித்த சிங்கங்கள்… 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை.. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 9:27 am
Cm stalin - csk - updatenews360
Quick Share

4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த சென்னை அணி, டூபிளசிஸின் 86 ரன்கள் குவிக்க, 20 ஓவர்களுக்கு 192 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்த போதிலும், பின்னர் வந்த வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கடந்த சீசனில் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றதால், தோனியின் மவுசு இன்னும் குறையவில்லை என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. சிங்கம் மீண்டும் கர்ஜித்துள்ளது. 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது தோனி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 530

0

0