ரூ.10.04 கோடி மதிப்பிலான பள்ளி, கல்லூரிகளுக்கான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
30 August 2021, 4:08 pm
CM stalin - updatenews360
Quick Share

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.10.04 கோடி செலவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை மூலமாக கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, கோயம்புத்தூர்‌ நகரில்‌ | கோடியே 10 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள பணிபுரியும்‌ மகளிர்‌ தங்கும்‌ விடுதி, மயிலாடுதுறை மாவட்டம்‌,
தில்லையாடியில்‌ தலா 1 கோடியே 32 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்‌ மற்றும்‌ பள்ளி மாணவியர்‌ விடுதிகள்‌, மயிலாடுதுறையில்‌ தலா 1 கோடியே 32 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர்‌ விடுதி மற்றும்‌ கல்லூரி மாணவியர்‌ விடுதி, விருதுநகர்‌ மாவட்டம்‌, சோழபுரத்தில்‌ 1 கோடியே 14 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர்‌ விடுதி, நபார்டு நிதியுதவியுடன்‌ திருநெல்வேலியில்‌ 1 கோடியே 26 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர்‌ விடுதி, கிருஷ்ணகிரியில்‌ 1 கோடியே 26 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்‌ விடுதி, என மொத்தம்‌ 10 கோடியே 4 இலட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவியர்‌ விடுதிகள்‌ மற்றும்‌ பணிபுரியும்‌ மகளிர்‌ விடுதி, என 8 கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.

இந்த நிகழ்ச்சியில்‌ மாண்புமிகு ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ திருமதி என்‌.கயல்விழி செல்வராஜ்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு இ.ஆ.ப., ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ க.மணிவாசன்‌ இ.ஆ.ப., ஆதிதிராவிடர்‌ நலத்துறை ஆணையர்‌ திருமதி.சோ.மதுமதி இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ (தாட்கோ) மேலாண்மை இயக்குநர்‌ திரு.கே.விவேகானந்தன்‌,
இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

Views: - 227

0

0