சேலை கட்டிய அனைவருக்கும் ரூ.1000… திமுகவை டேமேஜ் செய்த பாஜக பிரமுகர்!
Author: Udayachandran RadhaKrishnan30 June 2025, 10:59 am
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் உள்ளிட்ட பாஜக, அதிமுக நிர்வாகிகளுடன் பலரும் இணைந்து, மனதின் குரல் நிகழ்ச்சியை பார்த்தனர்.
பின்னர், பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக ஓரணி இல்லை, இந்த நாட்டின் பிணி. போதை பொருள் விற்பனை மூலம் பலம் பெற்றவர் சபரீசரன் மனைவி செந்தாமரை தான். முதலில் கைதாக வேண்டியவர் செந்தாமரைத்தான்.
இதையும் படியுங்க: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவும் அப்பாவிகள்… விற்றவன் எங்கே? சீமான் ஆவேசம்!!
போதை பொருள் விவகாரத்தில் நடிகர்கள் கைது செய்யப்படுவது தவறு இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை அகற்ற, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும்.
2021 திமுக ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போது வரையில் எண்ணற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை நிலவி வருகிறது.
ஜனநாயக காவலராக பாரத பிரதர் இருப்பதால் திமுக ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் திமுக ஆட்சியை அகற்ற ஆயிரம் காரணங்கள் உள்ளன.
தேர்தல் வருகிற போது சேலை கட்டிய அனைவருக்கும் 1000 ரூபாய் எனக் கூட அறிவிப்பார்கள். ராமதாஸ் அவர்கள் குடும்பப் பிரச்சினைக்காக திமுகவை ஆதரிப்பார் என கூற முடியாது.
தற்போதைய பிரச்சினையில் திமுகவின் தலையீடு இல்லை என கூறி இருக்கிறார் தவிர, நான் திமுகவை ஆதரிப்பேன் என அவர் கூறவில்லை என பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்தார்..