நிலக்கரி பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து : திம்பம் மலைப்பாதையில் தொடரும் சோகம்!!

17 May 2021, 10:38 am
Lorry Accident- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகன ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆசனூர் சீவக்காய்பள்ளம் அருகே உள்ள வளைவில் லாரி திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவம் அறிந்து வந்த ஆசனூர் காவல்துறையினர் கிரேன் மூலம் வாகனத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 117

0

0