ஓமைக்ரான் அச்சுறுத்தலால் கோப்ரா படக்குழுவுக்கு வந்த சிக்கல் : இறுதியில் எடுத்த பிரமாண்ட முடிவு…!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 6:06 pm
Quick Share

ஐ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தைத்தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். அதேவேளையில், ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்குவதால், ட்ராங்கான சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இந்தப் படம் இருக்கும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

அதோடு, ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இதில்

கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற படக்குழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்த ஊரு திரும்பியது. இந்த நிலையில், எஞ்சிய காட்சிகளை படமாக்குவதற்காக, வெளிநாடு செல்ல கோப்ரா படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்குள் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் உலக நாடுகள் தங்களின் எல்லையை மூடி வருகின்றன. வெளிநாட்டவர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படத்தையும் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சண்டை காட்சிகளை உள்ளூரிலேயே எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, பிரமாண்ட செலவில் க்ரீன் மேட் செட் போடப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் எடுக்க வேண்டிய காட்சிகளை இந்த க்ரீன் மேட்டில் எடுத்து, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்களது தேவைக்கேற்ப காட்சிகளை அமைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்களாம். இதனால், வெளிநாடு செல்லும் கோப்ராவின் கனவு தகர்ந்துள்ளது.

Views: - 171

0

0