பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் மீது மரம் விழுந்து விபத்து… ஒருவரின் கால் துண்டிப்பு..! கோவையில் சோகம்….!

Author: Babu Lakshmanan
11 May 2022, 5:47 pm

கோவையில் பத்திரப்பதிவு அலுவலகத்த்திற்கு வந்த நபர்கள் மீது மரம் விழுந்ததால் ஒருவரின் கால் துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு பகுதியில் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூரை சேர்ந்த பரூக் என்பவர் கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தன்னுடைய வேலை சம்மந்தமாக வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த மரம் ஒன்று முறிந்து அவர் மீது விழுந்துள்ளது. மரம் விழுந்ததில் அவருடைய கால் இரண்டு துண்டாகியுள்ளது. அதேபோல் அருகில் இருந்த பெண் ஒருவர் மீது மரம் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.

அங்கிருந்த நபர்கள் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்திரப்பதிவிற்கு வந்த நபர் மீது மரம் விழுந்து கால் துண்டான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?