கோவை அதிமுக நிர்வாகியின் மகளுக்கு ‘இதயா’ எனப் பெயர் சூட்டிய இபிஎஸ்… தொண்டர்கள் நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
14 September 2022, 9:28 am

கோவை : கோவை மாவட்ட அதிமுக நிர்வாகியின் மகளுக்கு ‘இதயா’ என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம் தேதி வருகை புரிந்தார்.

அப்போது, கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் வினோத்குமார் மற்றும் சங்கீதா தம்பதியினர், தங்களின் மகளுக்கு பெயர் சூட்டும்படி, எடப்பாடி பழனிசாமியிடம் அன்பு கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று, இதயதெய்வம் என்ற வார்த்தையில் உள்ள முதல் வார்த்தையான ‘இதயா’ என்ற பெயரை வைத்தார். இந்த நிகழ்வின் போது அதிமுக தலைமை நிலைய செயலரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ வி.பி. கந்தசாமி உள்பட பலர் இருந்தனர்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…