‘பெரிய கடை வீதி எப்படி இருக்கனும்‘ : பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கோவை மாநகராட்சி அழைப்பு…!

21 August 2020, 3:26 pm
Big Bazaar Street - Updatenews360
Quick Share

கோவை: கோவை பெரியகடை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை பெரிய கடை வீதி பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான மாதிரி வரைபடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும் பெரிய கடை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களை இணைய தளம் வாயிலாக பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றும். அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தெரிவிக்கலாம்..

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc9pPAUwkMyJGMS2ARla5e-l7b5aliBtrTgz9SOi4nKc4L6og/viewform?usp=send_form