காரால் அடித்து தூக்கியதில் கால்கள் உடைந்த பெண்… சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பு ; தப்பியோடிய வடமாநில தொழிலதிபர்!

Author: Babu Lakshmanan
5 October 2023, 12:31 pm

காரால் அடித்து தூக்கியதில் கால்கள் உடைந்த பெண்… சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பு ; தப்பியோடிய வடமாநில தொழிலதிபர்!

வடகோவை சிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன் இவரது மனைவி லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கென்னடி திரையரங்கு அருகே நடந்து சென்ற போது பின்னால் அதி வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி, பின்னர் லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்தியவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும் அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் அதி வேகமாக வரும் கார் இருசக்கர வாகனம் மற்றும் லீலாவதி மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்‌ மோதிய வேகத்தில்‌ தூக்கி வீசப்பட்ட லீலாவதிக்கு வலது கால்‌ முறிவு ஏற்பட்டதுடன், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவி இழந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கார் விபத்தை ஏற்படுத்திய வட மாநில தொழில்‌ அதிபரான உத்தம்‌ குமார்‌ என்பவர் ஆர்‌. எஸ்‌.புரத்தில்‌ வசிப்பதாகவும்‌, அவரது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி 2 ஆண்டுகளானதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய போது, விபத்தால் பாதிக்கப்பட்ட லீலாவதிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை செய்து தருவதாக கூறி கெஞ்சியுள்ளார். ஆனால், போலீசார் தரப்பில் உத்தம் குமாருக்கு ராஜ மரியாதை கொடுப்பதாகவும், அவரது சிகிச்சைக்கு உதவுவதாக கூறிய தொழில்‌ அதிபர்‌ உத்தம்‌ குமாரும்‌ , போலீசார்‌ ஆதரவு இருப்பதால்‌,ஏமாற்றி விட்டதாகவும்‌ தற்போது சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும்‌ உறவினர்கள்‌ வேதனை தெரிவித்தனர்‌.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?