பட்டப்பகலில் பெண்ணிடம் செயினை பறித்து சென்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள்..!!

22 September 2020, 11:22 am
Quick Share

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடையில் இன்று பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்த நிலையில், ஒருவர் மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினம்
கழுத்தில் இருந்த செயினை பறித்து விட்டு தப்பி ஒட முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் இளைரை தள்ளி விட்டு சப்தம் எழுப்பவே, அருகில் இருந்த பொது மக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

பின்னர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப், ரத்துல் என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0