ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்.. புகார் மீது அலட்சியம் காட்டியதால் விரக்தி ; கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 12:54 pm

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு 1.5 சென்ட் நிலத்துடன் கூடிய வீடு உள்ளது. இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபர் தனது வீட்டையும், நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனம் உடைந்த முத்துராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவிப்பதற்காக வந்தார்.

இந்நிலையில், திடீரென கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர்.

பின்னர், இது சம்பந்தமாக விசாரிப்பதற்காக அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!