கோவையில் இரண்டாவது நாளாக 500ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!

1 September 2020, 6:31 pm
corona Cbe -Updatnews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்றும் 500ஐ கடந்துள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஒரே நாளில் உச்சபட்ச அளவாக 589ஆக இருந்தது.

இதுவரை கோவையில் ஒரே நாளில் 500க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்த சூழலில், நேற்று எண்ணிக்கை 500ஐ கடந்திருந்தது. இந்த சூழலில், இரண்டாவது நாளாக இன்றும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

அதன்படி இன்று 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 71ஆக அதிகரித்துள்ளது நினைவுகூறத்தக்கது.

Views: - 0

0

0