கோவையில் குறைந்த கொரோனா : பாதிப்பு சற்று தணிந்தது!!

Author: Udayachandran
3 October 2020, 7:44 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.

கோவையில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது முதல் அதாவது ஜூன் முதல் வாரம் முதல் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. அப்போது முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

கடந்த மாதம் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 600ஐ கடந்திருந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களால தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

நேற்று 495 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் இன்னும் சற்று தனிந்து 486 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதுவரை கோவையில் 455 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், இன்று 685 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இதுவரை 28 ஆயிரத்து 438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 718பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 40

0

0