அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் உட்பட 392 பேருக்கு கொரோனா உறுதி
18 August 2020, 7:57 pmகோவை: கோவை அரசு மருத்துவமனை பெண் மருத்துவ அலுவலர் உள்பட 392 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் பணியாற்றி வந்த 57 வயது பெண் மருத்துவ அலுவலருக்கு அறிகுறிகள் இருந்ததால் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்துள்ளார். இதில் பெண் மருத்துவ அலுவலருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர 31 வயது செவிலியர், 26, 35 வயது ஆண் மருத்துவப் பணியாளர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் 53 வயது ஆண் மருத்துவப் பணியாளர், சூலூர் விமானப்படையை சேர்ந்த 28 வயது விமானப் படை வீரர், மதுக்கரை ராணுவ முகாமை சேர்ந்த 38 வயது ராணுவ வீரர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர மதுக்கரை வட்டாரத்தில் 24 பேர், மேட்டுப்பாளையத்தில் 13 பேர், ராமநாதபுரத்தில் 13 பேர், ஆர்.எஸ்.புரத்தில் 12 பேர், பொள்ளாச்சியல் 10 பேர், சிங்காநல்லூர், சூலூரில் தலா 9 பேர், கணபதியில் 8 பேர், போத்தனூர், சீரநாயக்கன்பாளையத்தில் தலா 6 பேர் உள்பட 392 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.