கோவை மாநகராட்சி அதிகாரிகள் பணியில் இருந்து விடுவிப்பு : 3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 7:57 pm
Cbe Corporation - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியில் பணியாற்றிய 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் 2 பேர் கட்டாயக் காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் சிவ் தாஸ் மீனா கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், கட்டாய காத்திருப்பில் வைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாநகராட்சியில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்த லட்சுமணன், துணை துணை செயற்பொறியாளராக இருந்த சரவணகுமார் ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநகராட்சியில் செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வந்த பார்வதி வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல மற்றொரு செயற்பொறியாளராக இருந்த ஞானவேல் ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த ராமசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் மதுரை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரையில் பணியாற்றிவந்த கருப்பாத்தாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

Views: - 156

0

0