கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை : ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அதிரடி!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 12:38 pm

கோவை : கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10ஆண்டு சிறை தண்டனையும் 2லட்சம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு அருகே உள்ள பள்ளபாளையம் சுதானந்த நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பூங்கோதை (46) கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு, வீரப்பன் சத்திரம் அருகே ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூங்கோதையை போலீசார் சோதனையிட்டுள்ளனர்.

இவரின் இரு சக்கர வாகனத்தில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பூங்கோதையை கைது செய்து கோவை இ.சி.கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், பூங்கோதைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் பரபரப்பு தீர்ப்பளித்தார்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?