கோவையில் 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா : ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு… தமிழக பாதிப்பு நிலவரம்..!!
Author: Babu Lakshmanan17 January 2022, 8:14 pm
சென்னை: தமிழகத்தில் மேலும் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 63 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. இன்று 20 பேர் உயிரிழந்துள்ளார். 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 009 ஆக அதிகரித்துள்ளது. இன்று 13,551 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 74 ஆயிரத்து 009 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 8,591 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,236 பேருக்கும், மூன்றாவது இடத்தில் கோவை 2,042 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0
0