தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு : வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதா..? விசாரணை

Author: Babu Lakshmanan
25 October 2021, 12:27 pm
elephant dead 1- updatenews360
Quick Share

கோவை மாவட்டம்,போளுவம்பட்டி வனச்சரகத்தில், இரண்டு தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, எலும்பு கூடான நிலையில் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள போளுவாம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகம் ஜவ் காடு வனப்பகுதியில் போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, யானையின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தது சுமார் 30 வயதுடைய ஆண் யானை என்பதும், உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த யானையின் உடலில் இருந்து தந்தம் வெட்டி சென்றுள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 255

0

0