நள்ளிரவில் நடுக்காட்டில் அமைச்சர்களின் காரை வழிமறித்த காட்டு யானை…!

8 August 2020, 1:01 pm
Minister Elephant- Updatenews360
Quick Share

கோவை : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நீலகிரி சென்று திரும்பிய போது அமைச்சர்களின் கார்களை காட்டு யானை வழி மறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்ய சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்து மற்றும் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பல்வேறு இடங்களில் சேதங்கள் பார்வையிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை முடித்து பின்பு நேற்று இரவு திரும்பினர்.

அப்போது மேட்டுப்பாளையம் அருகே பர்லியார் பகுதியில் வந்த போது அமைச்சர்களின் கார்களை காட்டு யானை வழிமறித்தது. பின்னர் அமைச்சர்கள் வந்த வாகனங்களில் ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

Views: - 8

0

0