நேற்று ஒன்று இன்று எட்டு..!! : கோவையில் மீண்டும் எகிறியது உயிரிழப்பு..!

14 July 2021, 9:19 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே ஒரு உயிரிழப்பு பதிவானதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் இன்று மீண்டும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் கோவை மாவட்டம் அதிக பாதிப்புகளை சந்தித்தது. தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து, தினசரி 300க்கும் குறைவான பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த சூழலில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று மாவட்டத்தில் ஒரே ஒரு உயிர் இழப்பு மட்டுமே கண்டறியப்பட்டது. இதனால் மக்கள் சற்றே நிம்மதியடைந்தனர். ஆனால், இன்று உயிர்பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.இன்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 116 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

414 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் தற்போது 3 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 லட்சத்து 55ஆயிரத்து 889பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 455 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25லட்சத்து 26ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 153

0

0