கோவையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா தொற்று

20 June 2021, 8:51 pm
Quick Share

கோவை: நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தினசரி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 3 ஆயிரத்தை கடன்ர உச்சத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்தது.

இந்த சூழலில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி இன்று, 904 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 10802 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 493 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 1888 பேர் உயிரிழந்துள்ளனர்.

Views: - 182

0

0